Thursday, March 20, 2008

சிவகாசி கிளைக் கூட்டம் 2008 மார்ச் 9

கந்தகப்பூக்கள் இலக்கிய அமைப்பின் 50வது மற்றும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சிவகாசி கிளையின் 31வது இலக்கியப் படைப்பரங்கம் அன்னை இல்லம் துவக்கப் பள்ளியில் மார்ச் 9 ஞாயிறன்று காலை மாநில செயற்குழு உறுப்பினர் கவிஞர் யுவபாரதி தலைமையில் நடைபெற்றது.தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூட்டம் தொடங்கியது. கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி ஆகியோர் இசைப்பாடல் பாடினர். கலித்தொகை ஒரு அறிமுகம் என்ற தலைப்பில் ஓய்வு பெற்ற பேராசிரியை பொ.நா.கமலா அவர்கள் சங்க இலக்கிய அறிமுகம் செய்தார். கனிமொழி கருப்பசாமி, இலக்கியராஜா, சண்முகப்பாண்டி ஆகியோர் கவிதைகள் வாசித்தனர். ஸ்வரமஞ்சரி சிறுகதை படைத்தார். விருதுநகர் கிளைத் துணைத் தலைவர் தொல்பொருள் ஆய்வாளர் ஆர்.பாலசந்திரன், முத்துபாரதி ஆகியோர் படைப்புகள் மீது விமர்சனம் செய்தனர். கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி அனைவருக்கும் நன்றி கூறினார். தேசிய கீதத்துடன் இனிதே நிறைவுற்றது.

No comments: